"லிவிங் டுகெதர்" முறையில் வாழ்ந்த காதலி வேறொருவரை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரத்தில் காதலியை, எரித்துக் கொலை செய்த காதலன்

0 2113

சென்னையில் திருமணமாகாமல் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண், வேறொரு நபரை திருமணம் செய்ய முயன்றதால், ஆத்திரத்தில் காதலனே எரித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சௌகார்பேட்டையில் துணிக்கடை நடத்தி வரும் 40வயதான சந்தீப் ஜெயின், கருத்துவேறுபாடால் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், இளைச்சி என்ற 35வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளைச்சியும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர் ஆவர்.

இந்த நிலையில், சந்தீப்பும், இளைச்சியும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக சேர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதனிடையே, இளைச்சி பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாக கூறப்படுகிறது.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத சந்தீப், ஞாயிற்றுக்கிழமைக்கு இரவு ரயிலில் செல்வதற்காக புறப்பட்ட இளைச்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. ஆத்திரத்தில் மண்ணெண்ணய் ஊற்றி இளைச்சியை கொலை செய்த சந்தீப், தாமும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments